தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே மக்களுக்கு அதிமுக சார்பில் கோடை வெயில் உக்கிரத்திலிருந்து நீர் மோர் பந்தல் திறந்து அவர்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் இன்றுகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த செல்லம் பட்டியில் அஇஅதிமுக கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டினம் வடக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் அசோக் குமார் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து சிறப்பித்தார். இதில் தண்ணீர், மோர், இளநீர், பழ வகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நாகரசம்பட்டி பேரூராட்சி செயலாளர். அண்ணாதுரை, தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் இரவிச்சந்திரன், திருமால், ஒன்றிய அவைத்தலைவர் வடிவேலன், ஒன்றிய துணை செயலாளர் சித்ரா முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மோகன் ,மாவட்ட பிரதிநிதிகள் சின்னதுரை, முருகையன், மஞ்சுநாத், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ், சாம்பசிவம் முன்னாள் ராணுவ வீரர், புருஷோத்தமன், ராமமூர்த்தி, கிருஷ்ணன், பெரியண்ணன், விஜயகுமார், சவீதா மூர்த்தி, ரமேஷ், ஆறுமுகம், காத்தவராயன், கார்த்திகேயன், காளியப்பன், சுப்பிரமணி, பெரியண்ணன், முருகன், மணி, சந்தோஷ், குணசேகரன், அன்பு, கோவிந்தன், ஆவத்துவாடி சாம்பசிவம், அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்