சென்னை, ஆகஸ்ட்- 30,, தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளர்கள் யூனியன் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூ.ர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது . தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளர் யூனியன் தலைவர் பி .செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில்
பொதுச் செயலாளர் ஆர் .வெங்கட்ராமன்,செங்கற்பட்டு மண்டல பொறுப்பாளர் கே. பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் வி .கே .பாபு பொருளாளர் எ .நாகராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளமின்றி பணியாற்றி வரும் கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால நிதி பயன்களை வழங்க வேண்டும். கடன் முழுவதும் தீர்க்கப்பட்டு திருப்பி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சுமார் 5500 பத்திரங்களை திரும்ப வழங்க வேண்டும்.
கடனின் காலம் முடிந்த நிலையில் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் வகையில் ஓ. டி .எஸ் ஒருமுறை கடன் தீர்வு திட்டத்தை வழங்கக் வேண்டும். கலைஞர் கனவு இல்ல திட்டம், முதல்வர் மருந்தகம் ஆகியவற்றை வீட்டு வசதி சங்கங்களின் மூலம் செயல்படுத்த வேண்டும். கலைக்கப்பட்ட சங்கங்களில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்களை கண்டறிந்து அவற்றை மீட்டு நலிவடைந்த சங்கங்களுக்கு வழங்க வேண்டும் போன்ற 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் , இப்போராட்டம் நடைபெற்றது.