By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
திருப்பத்தூர்மாவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

Last updated: November 27, 2024 10:26 am
November 27, 2024
99 Views
Share
SHARE

திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பட்டியலின  மாணவனை சாதி ரீதியாக கேவலப்படுத்தி பேசியதோடு,புத்தகத்தில் எழுதியும் அடித்தவர் மீது வன்கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

 

 

திருப்பத்தூர்:நவ:27, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட குனிச்சி மோட்டூர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ஏழாம் வகுப்பு படிக்கும்  பட்டியலின மாணவனை சாதி ரீதியாக கேவலப்படுத்தி பேசியதோடு, புத்தகத்தில் சம்பந்தப்பட்ட பட்டியலின சாதியை எழுதி அடித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வன்கொடுமை என் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளியின் முன்பு முற்றுகை செய்தனர். 

குளிச்சி மோட்டூர் பகுதியினை சேர்ந்த சுரேஷ் என்பவரின் இளைய மகன் சுதீப் (வயது 12) அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இசையை பற்றிய பாடத்தை வகுப்பறையில் விஜயகுமார் ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கும்போது, இசையைப் பற்றியும் இசைக்கருவிகளை பற்றியும் எடுத்துக் கூறியுள்ளார். இந்த இசை கருவிகளை வாசிப்பவர்கள் மிகவும் கேவலமானவர்கள் என்றும் பட்டியல் என ஆதிதிராவிடர் சமுதாய பெயரை புத்தகத்தில் எழுதியும் அடித்தும் கேவலப்படுத்தி உள்ளார். சம்பந்தப்பட்ட பட்டியலினத்தவர்தான் இதுபோன்று இசைக்கருவிகளை வாசிப்பார்கள் என பாடம் நடத்திக் கொண்டு கேள்வி கேட்டு மாணவன் சுதிப் என்பவரை அடித்துள்ளார். வகுப்பறையில் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர். ஆனாலும் சம்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் போனதற்கு பள்ளி கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலரிடம் சென்று மனுவாக எழுதி புகார் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மணியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஊடகங்களை அணுகி உள்ளனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா.சுபாஸ் சந்திர போஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் எ.ஜெ.சக்தி, துணைச் செயலாளர் மணி, ஒன்றிய பொருளாளர் சங்கர், திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் திருமா விமல், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் கோகுல் , மாவட்ட ஓவியர் அணி அமைப்பாளர் பாலா, ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்,ஒன்றிய அமைப்பாளர் இரா.விக்னேஷ், நகர இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளர் விக்கி,சுரேஷ், அன்பரசு மற்றும் பலரும் இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியின் முன்பு குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா
இலவச மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா
141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு
விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம்

November 10, 2025
56 Views
பாலக்கோடு பேரூராட்சியின் மூலம் விவசாய நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்
மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா
செங்கவிளை மகா கணபதி கோயிலில் விநாயக சதுர்த்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழா
வீரமா முனிவர் பிறந்த நாளை முன்னிட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account