கிருஷ்ணகிரி டிச 5: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காந்தி நகர் மற்றும் அம்பேத்கர் காலனி பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பன்னியள்ளி கிராமத்தில் 110 குடும்பங்களுக்கு நில எடுப்பு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு இதுவரை பட்டா வழங்காமல் சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்து வருவதாக தெரிகிறது. இது குறித்து பல முறை கிருஷ்ணகிரி வட்டாச்சியரை அணுகியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதால் விடுதலை சிறுத்தை கட்சியினர், அப்பேத்கார் காலனி மக்கள், மற்றும் காந்திநகர் மக்கள் ஒன்றுணைந்து கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு பட்டா வழங்கிட மறுக்கும் வட்டாட்சியரை கண்டிக்கும் வகையில் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றினை திரும்ப ஒப்படைக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கிருஷ்ணகிரி மத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில் நடைப்பெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் கடந்த கால் நூற்றாண்டுகளாக குடியிருக்க பட்டா கேட்டு போராடி வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்காததைக் கண்டித்து ஜனநாயக உரிமையான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடுப்ப அட்டை ஆகியவற்றை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் ஒப்படைக்கும் ஆர்பாட்டதில் ஈடுப்பட்டனர், யாருடைய தூண்டுதலின் வட்டாட்சியர் இப்படி நடந்து கொள்கிறார் என்றும், கூட்டணி கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு பட்டா வழங்குவதில் அலைகழிப்பு செய்வதாக வேதனையுடன் வி.சி.க மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தெரிவித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ஆலப்பட்டி ரமேஷ், முனியப்பன், நகர செயலாளர் கணபதி, மதிவாணன், இளம் சிறத்தை எழுச்சி பாசறை ஜெயசங்கர், சிவகுமார் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிவபிரகாஷ், பலராமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர். கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களின் ஆதார் அட்டை, மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்பு சாலையில் வீசி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



