நாகர்கோவில் ஜூன் 26
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக லாரிகள் மோதி உயிர் சேதம் என்பது தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் விபத்து குறைந்த பாடில்லை, இந்நிலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து கோட்டாறு வழியாக பறக்கை செல்லும் சாலையில் கனரக லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதி விபத்து ஏற்படுத்தியது, இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை பதற செய்துள்ளது. இதில் லாரி ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்படவே கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் உள்ள நான்கு இருசக்கர வாகனங்களில் மோதி நின்றது தெரியவந்தது. அப்போது அந்த இடத்தை பெண் ஒருவர் கடந்து போகும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை இதுகுறித்து கோட்டார் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக கனரக வாகனங்கள் காலை மாலை பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் நேரங்களில் நெருக்கடியான பகுதிகளுக்குள் நுழைவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்ற சாட்டு. கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



