கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புளியனூர் கிராமத்தின் அருகே உள்ள முக்கம்பாறை என்ற பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட நில வழிப்பாதை பிரச்சனை ஏற்கனவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மதியம் சுமார் 12 மணி அளவில் நல்லதம்பி என்பவர் அவரது விவசாய நிலத்தில் தேங்காய் வெட்ட சென்ற போது சீனிவாசன் தடுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக நல்லதம்பி அருகில் இருந்த அவரது வீட்டில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து வந்து சீனிவாசன் என்பவரை வெட்டியுள்ளார் இதில் பின் தலை கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பயங்கர வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அந்த நபரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் அறிவாளால் வெட்டிய நல்ல தம்பியை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.