சென்னை மே 05
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.
தனது தந்தை ஜெயக்குமாரை இரண்டு நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் காவல் நிலையத்திலே புகார் கொடுத்த பிறகு உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரது உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தேசியக்கட்சியினுடைய மாவட்டத் தலைவர் என்ற உயர் பொறுப்பில் இருப்பவருக்கே இது போன்ற நிலை ஏற்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கேள்விக்குறியாக இருக்கிறது எனவே தமிழக அரசு உயர்மட்ட விசாரணை நடத்தி அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக தமிழகத்திலே கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போவதை தமிழக அரசும் காவல் துறையும் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


