பல்வேறு குற்ற சம்பவங்களை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த வழக்கறிஞர்.
மயிலாடு துறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலினிடம் பல்வேறு குற்றங்களை தடுக்கக் கோரி மனு கொடுத்தார் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சங்கமித்திரன். இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடியும், வழக்கும் நடத்துபவர். இவர் இன்று காவல்துறை கண்கானிப்பாளரை சந்தித்து 2018ம் ஆண்டு நோட்டரி பப்ளிக்கிலிருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் சேயோன் என்பவர் தனது வீட்டு வாசலில் இன்று வரை நோட்டரி பப்ளிக் போர்டு வைத்து மக்களை ஏமாற்றுவதை தடுக்க கோரியும், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பவுன்ராஜ் எக்ஸ். எம்.எல் ஏ மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை உயர் காவல் துறை அதிகாரிகள் சந்திப்பதை கண்டித்தும், மாவட்டத்தில் உள்ள கஞ்சா, கள்ள சாரயத்தை கண்டித்து நீதிமன்ற வாயிலில் நான் போராட்டம் நடத்திய 20 நாட்களில் , கள்ள சாராயத்தை தட்டி கேட்ட இரண்டு இளைஞர்கள் வெட்டி கொல்லபட்டதையும் இப்படி சமூக அநீதிகளை எதிர்த்து போராடுவதால், விலாசம் தெரியாத ஒருவரை வைத்து என் மீது பார் கவுண்சிலில் புகார் கொடுக்க வைத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்து கோரிக்கை வைத்தார்