சென்னை, ஐயப்பன்தாங்கலை அடுத்த பரணிபுத்தூர்
பிரசன்ன விநாயகர் ஆலயம் மற்றும் வள்ளி தெய்வசேனா சமேத சிவசுப்பிரமணியர் நாகலிங்கம் துர்கை பைரவர், பரிவார மூர்த்திகளாகிய நர்த்தன கணபதி நவக்கிரக மூர்த்திகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வராகி அம்மன், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு ஆலய கலாபங்க வர்ண வேலைகள் நிவர்த்திக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் டி.குமார் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவின் போது சிவஞான குருநாதர் இரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் வாதவூரடிகள் ஆகியோர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பரணி புத்தூர் அருள்மிகு பிரசன்ன விநாயகர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் மேற்பார்வையில் சிறப்பாக செய்திருந்தனர்.