அரியலூர்,ஜூலை:29
அரியலூர் மாவட்டம் செந்துறையில் சினேகம் லயன்ஸ் சங்கம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், அரியலூர் மற்றும் நிலா கேர் பவுண்டேஷன், கனடா இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் இன்று தனியார் மண்டபத்தில் காலை 8 மணி முதல் 1 மணி வரை கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
லயன் சங்கத்தின் தலைவர் M.செல்வராஜ் தலைமையில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் V. எழில்மாறன் முன்னிலையில், லயன் சங்கத்தின் செயலாளர் V.செல்வகணபதி, லயன் சங்கத்தின் பொருளாளர் A.K. ஆதவன், லயன் சாசனத் தலைவர் R. செல்வம், லயன் சேவை தலைவர் S.P. சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கினர் மேலும் இந்த கண் சிகிச்சை முகாமில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்று தங்களின் கண்களை பரிசோதனை செய்து மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளின் படி முகாமில் பங்கு பெற்று சென்றனர்.