கோவை ஜுலை:23
கோவை ரத்தினபுரி பகுதி காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கோவை நாடார் சங்க அறக்கட்டளை மற்றும் காமராஜர் மெட்ரிக் பள்ளி இணைந்து +2,,+1,,10ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாடார் சங்க தலைவரும் காமராஜர் மெட்ரிக் பள்ளி தாளாளருமான ஆர். பாஸ்கரன் நாடார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நிறுவனர் டி.தனுஷ்கரன் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத்தலைவர் ராகம் . செளந்திரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
பொது செயலாளர் விஜயராகவன் தெரிவிக்கையில் கடந்த இரண்டு வருடங்களாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம்.
தென்னை மற்றும் பனை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுத்துள்ளோம். செல்வபுரம் பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் 26 கோடி மதிப்பீட்டில் சங்கம் சார்பாக திருமண மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளது. கட்டுமான பணிகளை ஓரிரு மாதங்களில் துவங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஹேமா ஸ்டாலின் துணை தலைவர்கள் ராதாகிருஷ்ணன் சந்தன பால்ராஜ் என் ஆர் வாசன் செயலாளர்கள் என்எல்சி சபாபதி எம் விஜயகுமார் சிலுவை முத்துக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.