குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 37 வார்டு வைத்தியநாதபுரத்தில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட நியாய விலை கடைக்கு நேற்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி அடிக்கல் நாட்டினார். இதில் ஊர் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், வேலு சரவணன், ராஜ் சுயம்புலிங்கம் பரமேஸ்வரன், பாஜக கட்சி நிர்வாகிகள் முன்னாள் தெற்கு மண்டல செயலாளர் ஸ்ரீதர், உமாரதிராஜன், ஜாக்சன், சந்திரசேகர் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர்கள் ஜவான் ஐயப்பன், ரமேஷ், ரோஸ்சிட்டா திருமால் முருகன் ஒப்பந்ததாரர் நாகராஜன், கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டர்கள்.



