நாகர்கோவில், டிச. 4 –
கன்னியாகுமரி மாவட்ட முழுவதும் சட்டத்துக்கு புறம்பாக சொந்த பயன்பாட்டு வாகனத்தை வைத்து பைக் டாக்சிகளை இயக்கும் RAPIDO, Red Taxi நிறுவனத்தின் மீதும், கேரள சுற்றுலா பேருந்து அத்து மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றுவதை யும், பயணிகளை ஏற்ற வேண்டிய வாகனங்களில் குறிப்பாக (ஆட்டோ, கார்) போன்ற வாகனங்களில் சரக்குகளை ஏற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் தமிழகம் முழுவதும் பதிவு பெற்ற தொழிற்சங்கம் தமிழகம் முழுவதும், இன்சூரன்ஸ், பெர்மிட், எப் சி , ஆல் இந்தியா பெர்மிட், கிறீன் டாக்ஸ், பொலிசன், ரோடு டாக்ஸ் வைத்துக் கொண்டு வாடகை வாகனங்களை இயக்கி வருகிறோம் ஆனால் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இவர்கள் மீது தொடர்ந்து புகார் கொடுத்து வருகிறோம் தாங்களும் நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள் ஆனாலும் இவர்கள் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விடுவதை நிறுத்தாமல் தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது புதிய முறையில் வாடகைக்கு விட்டு வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு வாடகை ஓட்டுனர்களுக்கு வருவாய் இழப்பு வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இழப்பு இதுபோன்று இன்னும் எண்ணற்ற இழப்புகளை சந்தித்து வருகிறோம்.
கன்னியாகுமரி மாவட்ட முழுவதும் சட்டத்துக்கு புறம்பாக சொந்த பயன்பாட்டு வாகனத்தை வைத்து பைக் டாக்சிகளை இயக்கி வருவது, குமரி மாவட்டத்தில் கேரள பதிவென் கொண்ட சுற்றுலா பேருந்துகள் அனுமதியின்றி பயணிகளை ஏற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,
பயணிகளை ஏற்றி செல்ல வேண்டிய ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் சரக்குகளை ஏற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மோட்டார் வாகன சட்ட விதியின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள் சிலர் கலந்து கொண்டார்கள்



