மார்த்தாண்டம், மார்-3
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கீழ்பகுதியில் 105 தூண்கள் உள்ளது. இது இரும்பினால் செய்யப்பட்டது ஆகும். இந்த தூண்களில் அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தது. இதனால் அதில் உள்ள பசையினால் இந்த இரும்பு நாளடைவில் பழுதுபடைய வாய்ப்பு உண்டு என்று பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி, ஆணையாளர் ராஜேஸ்வரன் அறிவுரையின் பேரில் நகராட்சி ஊழியர்கள் தூண்களை சுத்தம் செய்யப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டுவர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று நள்ளிரவு முன்சிறை பகுதியை சேர்ந்த ஒருவர் சுவரொட்டி ஓட்டினார். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரூ 5ஆயிரமும் நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.