திருப்பூர், செப்டம்பர் 02 –
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆ. ராசா எம்.பி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல. பத்மநாபன் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் க. செல்வராஜ் எம்.எல்.ஏ வரவேற்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ச்சுன்ராஜ், எம்.பி.க்கள் சுப்பராயன், வெங்கடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், கூட்டணி கட்சி தலைவர்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் நீதி மய்யம் மாநில துணை தலைவர் தங்கவேல், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் எஸ் கர்ணன் தேவர், ஆதி தமிழர் பேரவை நிறுவனதலைவர் அதியமான், திருப்பூர் காங்கிரஸ் கட்சி முன்னாள் சேர்மன் கிருஷ்ணன், மகிலா காங்கிரஸ் தலைவி ஆஷா, கலைப்பிரிவு கலா ராணி, கான பிரியா, தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜ், வடக்கு மாநகர செயலாளர் இளைஞர் அணி செயலாளர் ஈ. தங்கராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, சிட்டி வெங்கடாசலம், இரண்டாம் மண்டல தலைவர் தம்பி ஆர். கோவிந்தராஜ், கோவிந்தசாமி, பூண்டி நகர தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் குமார், நந்தினி, டிஜிட்டல் சேகர், பகுதி செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி, மு.க. உசேன் பாய், மியாமி ஐயப்பன், கோவிந்தராஜ், முருகசாமி, குமார், பி.ஆர். செந்தில்குமார், ஈஸ்வரமூர்த்தி, நந்தகோபால், ராமதாஸ் ஜோதி போலார் சம்பத் மின்னல் நாகராஜ், பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திர குமார், பூண்டி நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், அசோகன், ஜேசிபி பாலு, சீனிவாசன், விஸ்வலிங்கசாமி, சிவாச்சலம், கனகராஜ், துரைமுருகன், காளிபாளையம் விஸ்வநாதன், சிவபிரகாஷ், பால்ராஜ், எஸ்.ஆர். பழனிசாமி, அவிநாசி நகர தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி, மாநில மகளிர் பிரச்சார அணி குழு செயலாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கௌரி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் மற்றும் தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.



