திருப்பத்தூர், ஆக. 26 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக்காட்சியின் வாயிலாக சென்னை, மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் மாநிலம் முழுவதும் நகரப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியை திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்ல தம்பி அவர்களும் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். உடன் மகளிர் திட்ட இயக்குநர் விஜயகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தண்டபானி, நகரமன்ற தலைவர்கள் சங்கீதா வெங்கடேஷ், திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா, மேனாள் மாவட்ட ஆவின் பால் வளத்துறை தலைவர் வழக்கறிஞர் ராசேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



