குளச்சல், ஆக. 26 –
கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் பழனி முருகன் (49). கொத்தனார். இவர் தற்போது குளச்சல் அருகே வசித்து வருகிறார். இந்த நிலையில் பழனி முருகனின் அக்கா வீட்டு ஜன்னலை அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆசீர்நேசராஜ் (46) என்பவர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பழனி முருகன், ஆசீர் நேசராஜிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவ தினம் பழனி முருகன் பைக்கில் ஆனக்குழி பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆசிர் நேசராஜ், அவரது மகன் ராஜன் (18), 15 வயது மகள், நண்பர் முருகன் மற்றும் ஆணைகுழியை சேர்ந்த பீட்டர், சுபாஷ் ஆகியோர் சேர்ந்து பழனி முருகனை மறித்து தகராறு செய்து மரக்கட்டையால் தாக்கியுள்ளார்கள்.
இதில் பலத்த காயம் அடைந்த பழனி முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஆசீர்நேசராஜை கைது செய்தனர். கைதான ஆசீர் நேசராஜன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


