திருவெண்ணெய்நல்லூர், ஆக. 18 –
திருவெண்ணெய்நல்லூரில் அதிமுக சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77-வது பிறந்த நாளை முன்னிட்டு ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., இரா. குமரகுரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த முகாமில் கண் பார்வையில் குறைபாடு, இசிஜி உள்ளிட்ட பொது மருத்துவம் குறித்து
ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். இதில் நகர செயலாளர் ஆட்டோ ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், இராமலிங்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாக்யராஜ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வெங்கடேசன், எரளூர் தலைவர் வெங்கடாஜலபதி, அரசூர் தலைவர் இரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



