By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
விழுப்புரம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

Last updated: August 13, 2025 4:53 pm
August 13, 2025
45 Views
Share
SHARE

விழுப்புரம், ஆகஸ்ட் 13 –

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு தேவையான அரசு சேவைகள் மற்றும் திட்டங்களை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் விதமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் “உங்களுடன் எஸ்டாலின்” முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக “உங்களுடன் எஸ்டாலின்” திட்ட முகாம்கள் 15.07.2025 அன்று தொடங்கி 14.08-2025 வரை நடைபெறவுள்ளது. இதில் நகர்ப்புற பகுதிகளில் 21 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 81 முகாம்களும் ஆக மொத்தம் 102 முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்றைய தினம், திண்டிவனம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் “உங்களுடன் எஸ்டாலின்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது தற்பொழுது வரை நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை விவரம், துறை வாரியாக வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை விவரம், மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட எண்ணிக்கை விவரம் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை விவரம் குறித்தும், மனுக்கள் நிலுவைக்கான காரணம் குறித்து கேட்டறிந்ததுடன், மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பித்த நபர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்ததுடன் விண்ணப்பித்த நபர்களின் வீட்டிற்கே சென்று உண்மைத்தன்மை கண்டறியப்பட்டது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் கோவில்புரையூர் ஊராட்சியில் நடைபெறும் “உங்களுடன் எஸ்டாலின்” திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கி வருவதையும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முகாமில் தற்பொழுது வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை மற்றும் மகளிர் உரிமைத்தொகை வேண்டி பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டறிந்ததுடன் கோரிக்கை மனுக்கள் முதல்வரின் முகவரித்துறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமல்லாமல், முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிக்கு ரூ.8500/- மதிப்பீட்டில் மானிய விலையில் விசை தெளிப்பான் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

ஆய்வின்போது திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் திரு. யுவராஜ், செஞ்சி வருவாய் வட்டாட்சியர் திரு. துரைச்செல்வன், மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் திருமதி. தனலட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர்  பி.டி.ஒ அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்
கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக் கூட்டம்
மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி

July 17, 2024
103 Views
பகுதி துணை அமைப்பாளருக்கு பொன்னாடை
கோதையாறு: மரக்கிளை முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account