ஈரோடு, ஆக. 16 –
காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட துணை தலைவர் பாட்சா மத்திய தகவல் தொடர்பு துறை மந்திரிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 150 ஆண்டாக பதிவு தபால் சேவை நடைமுறையில் இருந்து வந்தது. இந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்படுவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
பதிவு தபால் சேவை குறைந்தபட்ச கட்டணம் ரூ.26, விரைவு தபால் கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 41 பதிவுத் தபால் அனுப்பினால் அந்த நபருக்கே போய் சேரும். விரைவு தபால் அனுப்பும் போது முகவரிக்கு போய் சேரும். பதிவு தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் சென்றாலும் ஒரே கட்டணம் தான். விரைவில் தபால் எடை கூடினாலும் கூடும் தூரம் கூடினாலும் அதற்கு தகுந்த கட்டணங்கள் மாறுபடும் .
மேலும் பல்வேறு விஷயத்திற்கு கடிதம் அனுப்பும் போது பதிவு தபால் அனுப்பினால் கடிதம் பெற்றுக் கொண்டு அக்னாலேஜ்மென்டில் முத்திரையிட்டு கையெழுத்து போட்டு தேதியிட்டு அனுப்பவருக்கு பதிவு தபால் கார்டு மீண்டும் அவர்களுக்கு ஆதாரமாக இருக்கும். விரைவு தபாலில் இந்த வசதி இருக்காது. ஆகவே மத்திய தகவல் தொடர்புத்துறை பழைய முறையை பதிவு தபால் முறையை செயல்படுத்த வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


