தருமபுரி, ஆக. 11 –
தருமபுரியில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கிங்டம் திரைப்படம் எடுத்திருப்பதாகவும் இந்த படத்தை திரையிடக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 5 ந் தேதி தருமபுரி டி மேக்ஸ் மல்டிபிலக்ஸ் திரையரங்கம் மற்றும் சந்தோஷ் திரையரங்கத்தில் கிங்டம் திரைப்படம் திரையிடப்படுவதாக பேனர்கள் வைக்கப்பட்டது. இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஸ் குமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் திரையரங்கு முன்பு ஒன்று திரண்டு படத்தை திரையிடக்கூடாது என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று திரையரங்கில் இத்திரைப்படம் ஒளிபரப்பட்டு ஓடக்கொண்டிருந்தது. அதனை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கு முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தியேட்டர் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திரையரங்கிற்குள் நுழைந்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி அனைவரையும் திரையரங்கிற்குள் இருந்து அழைத்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் எற்பட்டது. தொடர்ந்து கிங்டம் திரைப்படம் தியேட்டரில் ஒளிப்பரப்பமாட்டது என திரையரங்கு நிர்வாகம் அறிப்பை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



