By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி; தனியார் பள்ளி ஆசிரியை கோர்ட்டில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி; தனியார் பள்ளி ஆசிரியை கோர்ட்டில் புகார்
கனஂனியாகுமரி

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி; தனியார் பள்ளி ஆசிரியை கோர்ட்டில் புகார்

Last updated: August 7, 2025 7:07 pm
August 7, 2025
160 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஆக. 7 –

இரணியல் அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி (40) என்ற தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியை இரணியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தாய், மகள், மகன், மருமகள் என்று 4 பேர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வந்துள்ளனர். இதை தனது முன்னாள் மாணவர் ஒருவர் கூறியதன் பேரில் உண்மை என்று நம்பிய நாகலட்சுமி இந்த கும்பலை தொடர்பு கொண்டு உள்ளார்.

அப்போது அவர்கள் மலேசியாவில் கேஷியர் வேலை இருப்பதாகவும் அதற்கு ரூ. 2.50 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பிய நாகலட்சுமி ரூ.2 50 லட்சத்தை ரொக்கமாகவும் வங்கி கணக்கு, கூகுள் பே மூலமாகவும் கொடுத்துள்ளார். பின்னர் மலேசியாவுக்கு நாகலட்சுமி அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் கூறியது போல் கேஷியர் வேலை கொடுக்கவில்லை. மீண்டும் அங்கே வைத்து ஓட்டலில் சர்வர் வேலை வாங்கி தருவதாக கூறி இங்குள்ள கும்பலின் உறவினர் ஒருவர் மீண்டும் பணம் பறித்துள்ளார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு இடையில் சில நாட்களிலேயே சொந்த ஊர் திரும்பிய நாகலட்சுமி இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பையும் வரவழைத்து பேசினர். அப்போது அந்த கும்பல் ரூ. 1 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்து அடித்து உள்ளனர். இது சம்பந்தமாக இரணியர் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

இது குறித்து நாகலட்சுமி குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை என் ஆர் ஐ அதிகாரி ஆகியோருக்கும் புகார் கொடுத்தார். ஆனாலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் பண மோசடி செய்யும் நோக்கத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி வெளிநாட்டிற்கு இந்திய தொழிலாளர்களை கடத்தி செல்லும் குடிப்பெயர்வு சட்டம் 1983, பிரிவு 10-ன் படி அரசின் பதிவு பெறாத போலி முகவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 படி மனித கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மோசடி செய்த பணத்தை மீட்பதோடு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விசிக தலைவர் பிறந்த தின விழா; 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் டைசன் வெற்றி: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.
பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் டிரைவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்

July 27, 2024
87 Views
புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம்!
மின்வாரிய குறைபாடுகளை நீக்க நுகர்வோர் கூட்ட
செவிலியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு
பிரகதீஸ்வரர் ஆலயம் உண்டியல் காணிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account