தேவகோட்டை, ஆக. 06 –
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் பஞ்சாயத்து மைக்கேல் பட்டி கிராம மக்களின் நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுதர
கோரி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். மைக்கேல் பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகளாக நான்கு தலைமுறைகளுக்கு மேல் அனுபவித்து வரும் நிலங்களை மோசடியாக பத்திர பதிவு செய்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வருபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து மோசடியாக பதிவு செய்துள்ள பட்டாவை ரத்து செய்தும் கிராம மக்கள் பெயரில் பட்டாவை மாற்றம் செய்ய உத்தரவிட கோரி 200க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கை குழந்தைகளுடன் வந்து விவசாய தொழிலாளர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.