ஈரோடு, ஜூலை 31 –
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஹேண்ட்மேடு திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு பச்சான் கார்டு வழங்கப்பட்டது. பவானியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நெசவாளர் சேவை மையத்தின் இணை இயக்குநர் கார்த்திகேயன்
பவானி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள 50 நெசவாளர்களுக்கு பச்சான் கார்டுகள் வழங்கினார்.
இந்த சிறப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வு பவானி பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களுக்கு தேவையான அங்கீகார ஆதாரங்களை வழங்குவதோடு அவர்களது தொழில் வளர்ச்சிக்கான புதிய வாயில்களையும் உருவாக்கும் முக்கிய முயற்சியாக அமைந்தது.