திருவாரூர், ஜூலை 26 –
திருவள்ளூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பூங்கா நகரில் உள்ள க்யூ‑ஸ்பின் டி.டி.ஏ. மையத்தில் அதன் உரிமையாளர் மற்றும் தலைவர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் 12 பள்ளிகளில் இருந்து 50 அணிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் டேபிள் டென்னிஸ் போட்டியாளர் ஆர். பிரணவ் சந்திரன் பரிசுகளை வழங்கினார்.
அதன் பின்னர் அவர் பேசுகையில், இனி வரும் காலங்களில் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார். போட்டிகளில் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.