நாகர்கோவில், ஜூலை 24 –
நாகர்கோவிலில் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எந்தெந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து அப்டா மார்க்கெட் பகுதியில் 5 காமிராக்களும், அப்டா மார்க்கெட் சாலை, ஔவை சண்முகம் சாலை, பாலமோர் ரோடு, கேப் ரோடு, மணக்குடி சாலை, ஈத்தாமொழி சாலை, என்.ஜி. ஓ. காலனி சாலை, ஏ.ஆர் கேம்ப் ரோடு, பெண்கள் கிறிஸ்தவ சாலை, கே.பி ரோடு, குளச்சல் ரோடு, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி சாலை, எம்.எஸ். ரோடு, டிஸ்லரி ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, பொதுப்பணித்துறை அலுவலக சாலை ஆகிய இடங்களில் தலா 10 கண்காணிப்பு காமிராக்கள் வீதம் மொத்தம் 165 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக கேமராக்கள், இதர இணைப்பு சாதனங்கள் வாங்கிட ரூ.27.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.