திண்டுக்கல், ஜூலை 16 –
திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. கிளை அலுவலகத்திற்கு முன்பாக கோவை பேரவையின் கிளை கழகம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. துவக்க விழாவிற்கு திண்டுக்கல் மண்டல செயலாளர் சி. ராசையா, தலைவர் ரங்கசாமி, பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். கொள்கை பரப்புச் செயலாளர் அரசப்பன், துணைச் செயலாளர் காந்தன் மற்றும் சட்ட ஆலோசகர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.
இன்றைய துவக்க நாளில் சங்க கூட்டத்தின் நோக்கமாக போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகை மற்றும் டி.ஏ வை மதுரை உயர் நீதிமன்றம் மூலமாகவும் டெல்லி உச்சநீதிமன்றம் மூலமாகவும் பெற்று தரப்பட வேண்டும் என்று மண்டலச் செயலாளர் கூட்டத்தில் உரையாற்றினர். இக்கூட்டத்திற்கு 200க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களும் புதிதாக இணைந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.