தருமபுரி, ஜூலை 12 –
தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப்போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பாரதிபுரம் வரை சென்று முடிவடைந்தது. இந்த பேரணியில் ஸ்ரீ கிருஷ்ண பாரா மெடிக்கல் கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கல்லூரியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லோகநாதன், மருத்துவ பணி இயக்குனர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.