ராமநாதபுரம், ஏப்.25-
பொது விநியோகத்தில் தனித்துறை விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 90% இருந்து மீண்டும் 40 சதவீதம் நடைமுறைப்படுத்துதல், இணையதள சேவை மேம்படுத்துதல், எடை தராசு அலுவலக கணினியும் இணைந்து ரசீது வழங்கிய பின்பு நியாய விலை கடை எடை தராசு விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும், ஓய்வூதியம் உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலத் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவரும் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மாரிமுத்து கண்டன சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை ஆற்றி விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர்கள் பழனிஸ்வரன் கோவிந்தன் ஜெகநாதன், துரை, துணைச் செயலாளர்கள் சேதுபாண்டி, ஆசைத்தம்பி, சையது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் காளிதாஸ் மணிவண்ணன், வட்டத் தலைவர்கள் கணபதி குமரேசன் உட்பட மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான ரேஷன் கடை விற்பனையாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.



