தருமபுரி, அக்டோபர் 04 –
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையின் கட்சித் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தமிழக முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்னும் கொள்கை ழுழக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி அவர் தருமபுரியில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே திமுக அரசை தாக்கி பேசினார். தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கரூரில் நடந்த தமிழக வெற்றி கழக கூட்ட நெரிச்சலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தருமபுரியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மவுன அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் எதிர்க்கட்சிகள் நடத்தும் அனைத்து கூட்டங்களுக்கும் போதுமான பாதுகாப்பு அளிப்பது இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் ஆனந்த், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் அசோகன், நகரச் செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம், பழனி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரை பாசறை செயலாளர் சங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



