திருப்பூர், ஜூலை 01 –
கொடிக்கம்பம் வ.உ.சி நகர் பகுதியில் அரசமைப்பை காப்போம் ராகுல் காந்தி பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது. தலைவர் கிருஷ்ணன் தலைமையில் கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக குமரி மகாதேவன் கலந்து கொண்டார். திருப்பூர் மாநகரம் பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் மெடிக்கல் குருசாமி முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் கதிரேசன், பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி, பாகனேரி ரவீந்திரன், இணைந்தெழ சாதிக், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா, கிராமப்புற நகர்ப்புற கமிட்டி அமைப்பாளர் ஜெயின் லாபுதீன் முபாரக் பாஷா, சர்க்கிள் தலைவர்கள், டிவிசன் தலைவர்கள், தேசிய தோழர்கள், சார்பு அணி தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு கொங்கு மெயின் ரோடு தங்கம் மெடிக்கல் அருகில் இருந்து 300க்கும் மேற்பட்ட மகளிர் காங்கிரஸ் கொடியினை ஏந்திக்கொண்டு பேரணியாக திருப்பூர் மாநகரம் மகிலா காங்கிரஸ் தலைவி ஆஷா தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும் மேடைக்கு வருகை தந்தனர். இறுதியில் நன்றியுரை மெடிக்கல் குருசாமி ஆற்றினார்.



