மதுரை, ஜூன் 30 –
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை எஸ்.பி அலுவலகத்தில் AED (Automated External Defibrillator) கருவியை பொருத்தியது. இதற்கு முன்னர் மதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலம் முக்கிய அரசு அலுவலகங்கள் திடீர் இதய பிரச்சனைகளின் போது
உதவி செய்யும் வகையில் தயார் நிலையில் இருக்கின்றன.
இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.