ஈரோடு, ஜூன் 28 –
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் வெங்கிடுசாமி கூறியதாவது: கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், கலந்தாய்வு மூலம் பணி மாறுதல், கருணை அடிப்படையில் பணி நியமனம், எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு கால முறை ஊதியம், ஐடிஐ முடித்து 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பணிகளில் விதிகளை தளர்வு செய்து தொழில் நுட்ப உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 17 ந் தேதி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.