By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி தந்தை மார்சல் நேசமணியின் 131 வது பிறந்தநாள் : நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி தந்தை மார்சல் நேசமணியின் 131 வது பிறந்தநாள் : நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
கனஂனியாகுமரி

குமரி தந்தை மார்சல் நேசமணியின் 131 வது பிறந்தநாள் : நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

Last updated: June 13, 2025 7:16 pm
June 13, 2025
169 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 13 –

குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி தந்தை மார்ஷல் நேசமணியின்131-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்ற வேட்பாளரும் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மரிய ஜெனிபர் தெரிவித்ததாவது :- குமரி தந்தை மார்ஷல் நேசமணி 1895 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் பள்ளியாடி அருகேயுள்ள நட்டாலம் ஊராட்சிக்குட்பட்ட நேசர்புரம் எனும் கிராமத்தில் அப்பல்லோஸ், ஞானம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் கல்வி என்றால் என்ன என்பதே தெரியாத வறுமையில் வாடிய சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவியர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது பெற்றோரை அணுகி அவர்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப கேட்டு கல்வி உயர்வுக்காகப் பெரிதும் பாடுபட்டார். இதனால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார். இவர் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதும் பரவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நேசமணி அவர்கள் பல்வேறு தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைத்திட ஏற்பாடு செய்தார். இதனால் அவரது புகழ் திருவிதாங்கூர் முழுவதும் பரவியது. பனை மற்றும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களைப் போராடி வெற்றி பெற்றார். தமிழ்ப்பகுதிகள் தனி ஜில்லாவாக அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முழங்கினார். 1956-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழகப் பகுதிகள் தங்கள் உரிமையை நிலைநிறுத்தியதோடு தமிழகப் பகுதிகள் அனைத்தும் தாய் தமிழகத்துடன் இணைந்து அன்று முதல் கன்னியாகுமரி மாவட்டம் தோன்றியதற்கு முழு முதல் காரணமாக அமைந்தவர் மார்ஷல் நேசமணி ஆவார். எனவே கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி குமரித் தந்தை மார்ஷல் என அனைத்து மக்களால் புகழப்பட்டு வரும் மாபெருந்தலைவர். குறிப்பாக பெரியவர் என பெரியவர்களால் போற்றப்படும் பெருமைமிக்க தலைவர்; நீதிக்காகப் போராடிய நெஞ்சுரமிக்கத் தலைவர்; நேர்மையோடு வாழ்ந்து காட்டிய தலைவர்; தன்னலம் கருதாத தியாகச் செம்மல்; அன்பே உருவான அரும்பெருந்தலைவர்; தந்தைக்குத் தந்தையாய் – தலைவனுக்குத் தலைவனாய் இருந்து வழிகாட்டியாய் வாழ்ந்து வான்புகழ் கொண்ட மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் அவருடைய திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். உடன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிம்லர், கன்னியாகுமரி மண்டலச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவுக்கு யானை ஏற்பாடு செய்த கிராம மக்கள்
திமுக அரசுக்கு பாஜக நிர்வாகி சதீஷ் ராஜா கண்டனம்
டெம்போவில் கடத்திய 3டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

June 16, 2025
79 Views
நாகர்கோவில் வடசேரி ஆட்டோ டிரைவர் தற்கொலை
தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்
மாவட்ட(பொறுப்புத்) தலைவர்அ. இளங்கோவன் பொன்னாடை போர்த்தி கவுரவித்த
முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account