By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டெண்டர் விட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > டெண்டர் விட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

டெண்டர் விட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்

Last updated: May 31, 2024 11:56 pm
May 31, 2024
108 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 30 

தடிக்காரன்கோணம் ஜங்சன் முதல் வாழையத்து வயல் வரையிலான சாலைப் பணிகளுக்குரிய டெண்டர் தொடர்பாக அரசு மீது தி.மு.க குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தற்போது அவர் வழக்கை வாபஸ் பெற்றதால் நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதனடிப்படையில் இதற்குரிய சாலைப் பணிகளை தேர்தல் விதி முறைகள் நிறைவடைந்ததும் இதற்கான டெண்டர் விட்டு பணிகளை உடனடியாக தொடங்கி தரமான முறையில் பணிகளை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் அரசை வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வனப்பகுதிகள் நிறைந்த தடிக்காரன்கோணம் ஜங்சன் முதல் வாழையத்து வயல் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இப்பகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு 2021-ம் ஆண்டில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ரூ. 2 கோடியே 85 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் காரணமாக நிதி நிலுவையில் இருந்தது. மீண்டும் 2023-ல் பணிகளை தொடங்குவதற்கு டெண்டர் விடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் டெண்டர் தொடர்பாக தி.மு.க குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் வழக்கு தொடர்ந்த கேட்சனிடம் சமரசம் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டதால் அரசுக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை அவர் வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றம் தற்போது இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

 முக்கிய சாலையான தடிக்காரகோணத்தில் இருந்து கீரிப்பாறை சாலை வழியாக காமராஜபுரம், கொத்தன்பள்ளம் வாழையத்துவயல், பால்குளம் கீரிப்பாறை போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்பு பொதுமக்கள் மற்றும் ரப்பர் தொழிற்சாலைக்கு செல்கின்ற தொழிலாளர்கள், எஸ்டேட்டுகளுக்கு செல்லுகின்ற தொழிலாளர்கள் மற்றும் வாகனங்கள் மூலம் செல்கின்றவர்களும் பழுதடைந்துள்ள மோசமான இச்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய நேரங்களில் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் இச்சாலை வழியாக செல்வதற்கு மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையினை சரி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் சாலையினை சரி செய்வதற்கு காலம் தாழ்த்தி வருவது மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதாக உள்ளது. வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட சாலையினை சீரமைக்க வனத்துறை ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ள நிலையில் காலம் தாழ்த்தாமல், டெண்டர் விட்டு குறித்த காலத்திற்குள் இச்சாலைப்பணிகளை நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தற்போது துவச்சி அருகே நடைபெற்று வரும் தோவாளை சானலை சீரமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அப்போது தான் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை ஜுன் 1-ம் தேதி திறக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் சம்மந்தப்பட்ட துறை நிறைவேற்றி பேச்சிப்பாறை அணை தண்ணீர் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஏழு பறவைகள் கபடி குழு சார்பில் பகல்
நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்திலிருந்து
அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
பொன்னாடை போர்த்தி மத நல்லிணக்கத்திற்காக பாராட்டு சான்றிதழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

June 17, 2025
74 Views
கடத்திவரப்பட்ட 426கிலோ குட்கா பறிமுதல்
தருமபுரியில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவை, மனை தொழில் கட்டுமானம் அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்துதல் கூட்டம்
ஆடி திருக்கல்யாணத்தையொட்டி ராமநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம்
கிள்ளியூர் அங்கன்வாடி மையம் எம்.எல்.ஏ. திறந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account