அரசு பள்ளியில் உரிய அனுமதியின்றி பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரிய பெரும்பாக்கம் பஞ்சாயத்து துலங்கும்தண்டலம் கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டுவதாக கூறப்படுகிறது.மேலும் இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர், கிராம நிர்வாக அலுவலரிடம் வந்த புகாரை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் கோயில் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது
எனவும் சொல்லப்படுகிறது.
,எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.



