திருப்பூர் மே:13
திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாமன் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் சூரி கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி சார்பில் ஆடை அலங்கார அணி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களை வடிவமைத்த ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதன் பின்னர் மாமன் பட நாயகன் சூர்யா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து அதை மேடையில் கேட் வாக் செய்தனர். இதன் பின்னர் பேசிய நடிகர் சூரி இதே திருப்பூரில் 14 வயதில் பனியன் துணி சீரமைக்கும் ஆலையில் வேலை பார்த்ததாகவும் ஒரு தேங்காய் பன்னுக்கு அலைந்து திரிந்ததாகவும் திருப்பூரில் அனைத்து வீதிகளிலும் தான் நடந்து திரிந்த நிலையில் இன்று இந்த கல்லூரியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகப்பெரியது. சிவப்பு கம்பள வரவேற்பு என கண்கலங்கி பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி எனது தெரிவித்தார்.
மேலும் தனது வளர்ச்சிக்கு உழைப்பு நம்பிக்கை காரணம் எனவும் நான் வேகமாக வளரவில்லை 1997 முதல் கடுமையாக உழைத்து மேலே வந்துள்ளேன் தரைக்கு மேல் இருந்து வளரவில்லை தரைக்கு கீழே இருந்து வளர்ந்துள்ளேன் என தெரிவித்தார்.