குமரி மாவட்டத்தில் செயல் பட்டு வரும் ரோஜாவனம் குழுமத்தின் சார்பில் நேற்று இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமினை
கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் துவக்கி வைத்தார்.
அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஹெரின் சலேஷ் தலைமையிலான குழு பொதுமருத்துவ சேவைகளை வழங்கியது. நாகர்கோவிலின் பெஜான் சிங் மருத்துவமனை சார்பாக டாக்டர் ஆதிரா தலைமையில் கண் பரிசோதனைகள் நடைபெற்றன.
முகாமில் ரோஜாவனம் குழும தலைவர் அருள் குமார், துணை தலைவர் அருள் ஜோதி, முன்னாள் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் அருணாசலம், இன்ஸ்பெக்டர் ரகுபாலன், சமூக சேவகர் பழனியாப்பிள்ளை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாமஸ், திமுக இலக்கிய அணி நிர்வாகி அன்பழகன், சியாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.