ஈரோடு மே 9-
கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி கடந்த 21 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. இப்பள்ளியில் நடப்பாண்டு 138 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். அவர்களில் அதிக மதிப்பெண் பெற்று கவித்ரா 589 ஸ்ரீமதி 587 விக்னேஷ் 582 முதல் மூன்று இடத்தை பள்ளியில் பெற்றனர்.
இவர்களை பாராட்டி பள்ளி தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி அறக்கட்டளை தலைவர் வெங்கடாசலம் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இது பற்றி பள்ளி தலைவர் கே சி கருப்பணன் கூறும் போது
9 பேர் கணிதம் 5 பேர் கணினி அறிவியல் 4 பேர் கணினி பயன்பாடு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர். இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழ் மொழி சேர்க்கைக்கு மிக குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 10 ம் தேர்ச்சி முடிவான அன்று 11ம் வகுப்புக்கு சேர்க்கை நடைபெறும். 10 ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெரும் மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் இலவசம். இரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி பேருந்து பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிரி கே ஜி குழந்தைகளுக்கு பள்ளி பேருந்து இலவசம் மேலும் நீட் பயிற்சி இலவசம். பாட நூல்கள் கட்டணம் மட்டும் பெறப்படும். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் போதனை.ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி. 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பஸ் வேன் வசதி உள்ளது. மாணவர்களுக்கு கிரிக்கெட் ஜிம்னாஸ்டிக் மற்றும் ரைபிள் சூட்டிங் பயிற்சி வழங்கப்படுகிறது என்று கூறினார்.
கோபி வெங்கடேஸ்வரா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 21 ஆண்டுகளாக 100 சதம் பெற்று சாதனை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics