தருமபுரி மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் கே. பி. அன்பழகன் தலைமையில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், அண்ணா தொழிற் சங்க செயலாளர் பழனிச்சாமி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார், நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி மற்றும் மின்சார பிரிவு மண்டல செயலாளர் சாந்தமூர்த்தி, தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அண்ணா தொழிற்சங்க சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல் தொழிற்சங்க கொடி யை ஏற்றி வைத்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, நகர கழக செயலாளர் பூக்கடை ரவி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



