மயிலாடுதுறை மாவட்டம், ஏப்: 30
மயிலாடுதுறை மற்றும் குத்தாலத்தில் உத்திராபதீஸ்வரர் ஆலயங்களில் அமுது படையல்விழா நடைபெற்றது.சிவன் பிச்சாண்டவர் ருபத்தில் ஒரு இல்லம் சென்று பிள்ளை கறி கேட்டதால் தன் ஒரே மகனையே அறுத்து கறி சமைத்து. அவரை உணவருந்த அழைத்தப்போது: குழந்தை இல்லா வீட்டில் உணவருந்த மாட்டேன் என பிச்சாண்டவர் கூறும்போது. என் மகனை என் கையால் அறுத்து தான் உணவு சமைத்துள்ளேன் ஸ்வாமி என கூறியபோது மகனை கூப்பிடுங்கள் வருவான் பிச்சாண்டவர் கூறியபோது தந்தை – சீராளா மகனே -என மகனை அழைத்தபோது மகன் உயிருடன் வந்ததாக ஐதிகம்.
அதனையொட்டி உத்திராபதீஸ்வருக்கு மன்னம் பந்தல் திருமணஞ்சேரி,குத்தாலம் தோப்பு தெரு ஆகிய இடங்களில். உத்திராபதீஸ்வருக்கு அமுது படையல் செய்து. குழந்தை இல்லா தம்பதியருக்கு அன்னம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இப்படி அமுது படையலில் கலந்து கொண்டு அன்னம் உண்ட குழந்தை இல்லா தாய்மார்கள் மடியினில் அன்னம் வாங்கி உண்டது காண்போரை கண்கலங்க வைத்தது.