தென்தாமரைகுளம் ஏப் 29
தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென் தாமரைகுளம் தாமரை குளம் பதியில் சித்திரை திருவிழா கடந்த 18 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .
8 ம் நாள் திருவிழாவன்று மாலை 8 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வந்து இரவு 10 மணிக்கு பதி முன்பு கலிவேட்டை நடந்தது.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம் 11 ம் நாள் திருவிழாவான நேற்று (28ம் தேதி) தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5.30மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 6 மணிக்கு உகப்பாட்டு,காலை 9:30 மணிக்கு திருத்தேரோட்டம் நடந்தது. நண்பகல் 12:30 மணிக்கு சமபந்தி விருந்தும், மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ,மாலை 6.30 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் பதிவலம் வருதல்,இரவு 7.15 மணிக்கு திருக்கொடி அமர்த்துதல் இரவு 8 மணிக்கு
அன்ன தர்மம் வழங்குதலும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை தக்கார், குருபரம்பரையினர், மற்றும் அய்யாவின் அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.