நாகப்பட்டினம், ஏப்ரல் 19
நாகப்பட்டினத்தில் உள்ள ‘பொன்னி சித்திரக்கூடல்’ ஓவியப் பயிற்சி மையத்தில், மாணவர்கள் கலைத் திறமையை மேம்படுத்துவதற்காக புதிய ஓவிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய அரங்குகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து, மாணவர்களின் ஓவியங்களை நேரில் பார்வையிட்டார். மாணவர்களின் உழைப்பையும், கலைச் செயல்பாடுகளையும் பாராட்டினார்.
இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர் மு.சிவசாய், மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இந்தப் பெருமைக்குரிய சாதனைக்காக அவர் மற்றும் ஓவியத் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள் அனைவருக்கும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
மாணவர்களின் கனவுகளை உருப்படியாக்கும் பயிற்சி மையமாக ‘பொன்னி சித்திரக்கூடல்’ திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.