தருமபுரி கிழக்கு மாவட்டம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம், இண்டூரில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ஆ.மணி கலந்து கொண்டு 2026 தேர்தல் பணிகள், கழக ஆக்க பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார்.கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி,மாநில நிர்வாகி செந்தில்குமார்,மாவட்ட பொருளாளர் தங்கமணி,மாவட்ட துணை செயலாளர்கள் ரேணுகாதேவி,ஆறுமுகம்,
ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம்,கருணாநிதி,மல்லமுத்து,வீரமணி,ஒன்றிய அவைத்தலைவர் வேலு,அணிகளின் அமைப்பாளர்கள் பெரியண்ணன்,இளைய சங்கர்,ஐ.டி.விங் கௌதம்,இளைஞர் அணி ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.



