திண்டுக்கல்லை அடுத்த ஆர்.எம்.டி.சி காலணியில் உள்ள திரு இருதய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் முக்கிய விருந்தினர்களாக திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி,
பிரசிடெண்ட் மற்றும் சுப்பீரியர் ஜென்ரல் திரு இருதய சகோதரர்கள் சபை விக்டர்தாஸ், பிரவின்சியல் சுப்பீரியர் கௌஷானல் பிராவின்ஸ் ஸ்டீபன் ஆரோக்கியசாமி மற்றும் பிரவின்சியல் சுப்பீரியர் ஆஞ்சலோ பிராவின்ஸ் பாக்கியநாதன் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட நாயகன் ஆண்டனி வருகை புரிந்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
முன்னதாக ஆங்கில புலத்தலைவர் சவரி ஆரோக்கிய தாஸ் வரவேற்புரை வழங்கினார்.
திரு இருதய சகோதரர்கள் சபையின் அருட்சகோதரர்கள் டென்னிஸ் மைக்கேல், ஆல்பர்ட் சேவியர், ஞானப்பிரகாசம், சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சலேத் ராஜா, கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வநாயகம். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் இன்னாசிமுத்து விருந்தினர்களை கௌரவித்து ஆண்டறிக்கை வாசித்தார்.
பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ஒழுக்கம், கல்வி மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பிஏ தமிழ் முத்து வீரலட்சுமி,
பிஏ இங்க்லீஷ் மரிய ஸ்நோஃபியா மற்றும்
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் லுப்னா பானு ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிறைவாக அறிவியல் புலத் தலைவி ராஜேஸ்வரி நன்றியுரை கூறினார்.