வள்ளுவர் புர பொதுமக்களுக்கு *
அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் கொங்கு வேம்பு ஊராட்சி எஸ் பட்டி அடுத்த வள்ளுவர்புரத்தில் வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களது தொழில் ஜோதிடம் புரோகிதம் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிகம் இவர்கள் மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தமிழக அரசால் இலவச வீட்டு மனை பட்டா சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது இந்த இடத்தில் ஒரு சில நபர்கள் வீடு கட்டி உள்ளன மற்றவர்கள் வீடு கட்ட கூட பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் பழைய இடங்களிலே எந்த ஒரு வசதியும் இல்லாத வீடுகளிலேயே குடியிருந்து வருகின்றனர் இதற்கிடையில் ஆரூரைச் சேர்ந்த தனிநபர் காலியாக உள்ள இடத்தை இரவோடு இரவாக வீடு கட்ட கடகால் எடுத்து வீடு கட்டுவதற்கான வேலையை செய்து வருகிறார் இதைக் கேட்கச் சென்ற வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்களை கொலை மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் அரூரை சேர்ந்த குள்ளப்பன் என்பவர் மேற்படி இடத்தில் வீடு கட்டுவதை இந்த இடம் அரசால் வழங்கப்பட்ட இடத்தில் சம்மந்தமில்லாத நபர் வீடுகட்டுவது குறித்து மேற்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்க்கும் வட்டாட்சியர் அவர்களுக்கும் அருர் காவல் நிலையத்திற்கும் மனு அளித்தனர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என வள்ளுவர் புர பொதுமக்கள் புலம்புகின்றனர் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றிய தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் .