By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் தின விழாவில் தளவாய்சுந்தரம் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகளிர் தின விழாவில் தளவாய்சுந்தரம் பேச்சு
கனஂனியாகுமரிமாவட்டம்

மகளிர் தின விழாவில் தளவாய்சுந்தரம் பேச்சு

Last updated: March 10, 2025 1:07 pm
March 10, 2025 16 Views
Share
SHARE

 ஆரல்வாய்மொழி மார்ச் 10 

 

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, சக்தி மகளிர் அறக்கட்டளையின் சார்பில் பொதுமக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா தோவாளை அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் சக்தி மகளிர் அறக்கட்டளை தலைவர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

 

ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தின விழாவை கொண்டாடி வருகிறோம்.  பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.  குறிப்பாக தாலிக்குத் தங்கம், இருசக்கர வாகனம், பெண்களின் பணிச்சுமைகளை குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தொட்டில் குழந்தைத் திட்டம் போன்ற திட்டங்களை இந்நாளில் நினைவூட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.  தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க அரசு மகளிருக்கு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது.  இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது.  மகளிருக்கு இலவச பேரூந்து, மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறோம் எனக் கூறிவிட்டு, விண்ணைத் தொடும் விலைவாசியாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை எல்லாம் மக்கள் தலையில் சுமைகளை ஏற்றி அவர்களுக்கு மீளா துயரை ஏற்படுத்தி உள்ளது.  பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் தி.மு.க பெண்கள் நலனில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.  

 

இதற்கெல்லாம், வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு சம்மட்டி அடி கொடுக்க பெண்கள் முடிவு எடுத்துவிட்டார்கள்.   பெண்களுக்கு செய்த துரோகத்தின் விளைவை வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தி.மு.க-வினர் தெரிந்து கொள்வார்கள்.  இத்தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றி பெரும்   அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் பேசினார்.

 

இவ்விழாவில்  டாக்டர் பூர்ணிமா, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் அனிலாசுகுமாறன், பீமநகரி ஊராட்சி முன்னாள் தலைவர் சஜிதா சுப்பிரமணியம், தேரூர் பேரூராட்சித் தலைவர் அமுதராணி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி துணைத் தலைவர் சுதா பாலகிருஷ்ணன், காட்டுப்புதூர் ஊராட்சி முன்னாள் தலைவர் கிறிஸ்டிபாய், கடுக்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் கமலா மகராஜன், திடல் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜலெட்சுமி, அருமநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி, பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர் உஷாபகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாறன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் 55 பெண்களுக்கு தையல் இயந்திரம்

11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சந்தித்து வாழ்த்து பெற்றார்!!

March 7, 2025 16 Views
ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கு மயிலார் உற்சவ திருவிழா
தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் 146 பிறந்தநாள் விழா
குமரியில் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் சிலை
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?