முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை எம்எல்ஏ ராஜா எம்பி ராணி ஸ்ரீ குமார் வழங்கினர்
சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மார்ச் 1ஆம் தேதி பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினர். இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை,ராமச்சந்திரன், நகர அவை தலைவர் முப்பிடாதி , நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைபாண்டியன், வீராசாமி, சார்பு அணி அமைப்பாளர்கள் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி முருகன், தொண்டரணி அப்பாஸ் மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, சார்பு அணி துணை அமைப்பாளர்கள் விளையாட்டு மேம்பாட்டு அணி கேபிள் கணேசன், மாணவரணி வீரமணி, சுற்றுசூழல் அணி பாரதிராஜா, தகவல் தொழில்நுட்ப அணி சிவாஜி, விவசாய அணி முருகராஜ், மின் வாரிய தொமுச திட்டச் செயலாளர் மகாராஜன், நகராட்சி கவுன்சிலர் விஜய்குமார் மற்றும் ஜெயக்குமார், பாலாஜி, ஜான்சன், மாரி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.