தென் தாமரைக் குளம் பிப் 27
தமிழ்நாடு முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என திமுக பொறியாளர் அணி ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக பொறி யாளர் அணி ஆலோ சனை கூட்டம் கொட்டாரம் கட்சி அலுவ லகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப் பாளர் தமிழன் ஜானி தலைமை வகித்தார். ஒன்றிய திமுக செயலாளர் பாபு முன்னிலை வகித் தார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பேரூர் செய லாளர்கள் வைகுண்ட பெருமாள், சுதை சுந்தர், புவியூர் காமராஜ் மற்றும் பொறியாளர் அணி உறுப் பினர்கள் நாஞ்சில் ஐயப் பன், ஜினோ, கிப்ஸன், எஸ்லின் ஜெரால்டு, ஆல் வின், சுதன், ஸ்ரீ, மாவட்ட பிரதிநிதி பிரேம் ஆனந்த்,தகவல் தொழில்நுட்ப அணி தேவகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தி.மு.க., பொறியாளர் அணிக்கு உறுப்பினர் சேர்ப்பது மற் றும் தமிழ்நாடு முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.