திண்டுக்கல் மே :22
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டாரம் (தெற்கு) காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜிவ்காந்தி 33-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் எல்.முருகானந்தம் தலைமையில் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . இதில் மௌனகுரு. குமார், சந்தான யாக்கோப், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இதில் சிறப்பு விருந்தினர்களாக எஐசிசி ரசூல்மைதீன் , முன்னால் சேர்மேன் ராஜாஜி ஆகியோர் கலந்து கொண்டு 200 ஏழை பெண்களுக்கு சேலை மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு வண்டி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் போது பிஜேபி கட்சியில் இருந்து ஒன்றிய துணைத்தலைவர் பெரியசாமி தலைமையில் 25 நபர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியின் போது பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சக்திமுருகன், நேதாஜி, ஜெனிட்டாராணி, அழகர்சாமி, ஈஸ்வரன், சேசு, சேவியர் நகர தலைவர், சிவசுப்பிரமணி, கவுன்சிலர், ரமேஸ், பெலிக்ஸ்ராஜா மற்றும், தங்கபாண்டி, ஆனந்தன் மகளிர் அணி முருகதேவி உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்



